கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு
By DIN | Published On : 19th May 2019 09:51 AM | Last Updated : 19th May 2019 09:51 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருணகிரி மகன் பன்னீர்செல்வம் (35). விவசாயி. இவருக்குச் சொந்தமான 120 அடி ஆழ கிணறு அதே பகுதியில் உள்ளது. இதில் 5 அடிக்கு தண்ணீர் உள்ளது. கிணற்றிலிருந்த மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக பன்னீர்செல்வம் சனிக்கிழமை
கிணற்றில் இறங்கினார். மோட்டார் பழுதை சரிசெய்துவிட்டு மேலே ஏற முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இதுகுறித்து அந்தப் பகுதியினர் அளித்த தகவலின்பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) ரா.சுரேஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி பன்னீர்செல்வத்தை பத்திரமாக மீட்டனர்.