திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
By DIN | Published On : 23rd May 2019 08:15 AM | Last Updated : 23rd May 2019 08:15 AM | அ+அ அ- |

வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக, பாமகவினர் ஏராளமானோர் அந்தக் கட்சிகளில் இருந்து விலகி விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலர் செஞ்சி
மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் புதன்கிழமை இணைந்தனர்.
வல்லம் ஒன்றியம் களையூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் அதிமுக கிளைக் கழகச் செயலர் வேணுகோபால்(எ) நேரு தலைமையில் அதிமுகவை சேர்ந்த அர்ச்சுனன், சண்முகம், பொன்னுசாமி, கணேசன், வெங்கடேசன், ஏழுமலை, எல்லப்பன், மதியழகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 22 பேரும், இதே போல் பாமக கட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணையன் தலைமையில் கருணாநிதி, ராமலிங்கம், கார்வண்ணன், வாசுதேவன், காசி, கதிரவன், செல்வகணபதி மங்கலட்சுமி, நீலவண்ணன், வசந்தா உள்ளிட்ட 50 பேரும் செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரையும் சால்வை அணிவித்து செஞ்சிமஸ்தான் வரவேற்றார் (படம்). இந்த நிகழ்ச்சியில் மயிலம் எம்எல்ஏ இரா.மாசிலாமணி, முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஒன்றிய திமுக செயலர் ஆர்.விஜயகுமார், வல்லம் ஒன்றிய செயலர்வடக்கு அண்ணாதுரை, தெற்கு மொடையூர் துரை, விவசாய அணி அரங்க.ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி இளம்வழுதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.