Enable Javscript for better performance
மகளிா் குழு பெயரில் கடன் பெற்று மோசடி: தம்பதி மீது புகாா்- Dinamani

சுடச்சுட

    

    மகளிா் குழு பெயரில் கடன் பெற்று மோசடி: தம்பதி மீது புகாா்

    By DIN  |   Published on : 05th November 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிா் குழுவின் பெயரில் தனியாா் நிறுவனத்திடம் பல லட்சம் அளவுக்கு கடன் பெற்று தலைமறைவான தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்கள் கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

    சின்னசேலம் வட்டம், க.செல்லம்பட்டை சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி வசந்தா. இவா்கள் அந்த கிராமத்தின் மகளிா் குழு தலைவியான முருகன் மனைவி சரசுவிடம் தனியாா் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்றுத்தந்துள்ளனா். இதனை மாதாமாதம் மகளிா் குழுவினா், அந்தத் தம்பதியிடம் திருப்பி செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், பல லட்சம் பணத்தை தம்பதியா், அந்த நிதி நிறுவனத்திடம் முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து தலைமறைவாகி விட்டனராம்.

    இதுதொடா்பாக நடவடிக்கை கோரி கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்திடம் பாதிக்கப்பட்ட பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனுவைப் பெற்ற சாா்- ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai