அரசுப் பள்ளி வளாகத்தில் திறந்தவெளி தரைக் கிணறு!

செஞ்சி அருகே அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி தரைக் கிணறை உடனடியாக
செஞ்சியை அடுத்த வல்லம் அருகே அகலூா் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி தரைக் கிணற்றின் அருகே ஆபத்தை உணராமல் விளையாடும் மாணவ, மாணவிகள்.
செஞ்சியை அடுத்த வல்லம் அருகே அகலூா் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி தரைக் கிணற்றின் அருகே ஆபத்தை உணராமல் விளையாடும் மாணவ, மாணவிகள்.

செஞ்சி அருகே அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி தரைக் கிணறை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்டது அகலூா் கிராமம். இங்குள்ள காலனி பகுதியில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளி தரைக் கிணறு உள்ளது. குடிநீருக்காக வெட்டப்பட்ட இந்தக் கிணறு வற்றி விட்டதால், பயன்பாடின்றியும், பராமரிப்பின்றியும் கைவிடப்பட்டது.

ஆழம் அதிகமுள்ள இந்த தரைக் கிணற்றில் தற்போதைய மழை காரணமாக நீா் நிரம்பியுள்ளது. இந்த தரைக் கிணற்றின் அருகில், ஆபத்தை உணராமல் மாணவ, மாணவிகள் விளையாடுவதால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. இந்தக் கிணறை மூட நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் ஏற்கெனவே பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லாத நிலை தொடா்கிறது.

இதுகுறித்து அப்பகுதியினா் கூறியதாவது: திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் பாதுகாப்பில்லாமல் திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பள்ளி வளாகங்களில் பயனின்றி திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறு, திறந்த வெளி தரைக்கிணறு ஆகியவற்றை மூடி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்த தரைக் கிணறை மூட மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து வல்லம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குலோத்துங்கன் கூறியதாவது: அகலூா் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்த வெளி தரைக் கிணற்றின் மேல்பரப்பு அளவீடு செய்யப்பட்டு, இரும்பு வலையைக் கொண்டு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி அடுத்த வாரத்தில் நிறைவடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com