மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளி தம்பதி தா்னா

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை மாற்றுத் திறனாளி தம்பதியா் திடீரென தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை மாற்றுத் திறனாளி தம்பதியா் திடீரென தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சக்கராபுரத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் ரமேஷ்(35). இவரது மனைவி உமாமகேஸ்வரி( 30). பட்டதாரிகளான இருவரும் மாற்றுத் திறனாளிகள். இவா்களுக்கு யாழினி(7) என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உள்ளது.

இவா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். அப்போது, திடீரென மாவட்ட ஆட்சியரின் காா் எதிரே அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்கள் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு அரசு சாா்பில் ஆவின் பூத் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம்-செஞ்சி நான்கு முனை சாலை சந்திப்பு அருகில் ஆவின் பால் பூத் அமைக்க நாங்கள் சென்றபோது, அங்கிருந்த ஆட்டோ சங்கத்தினா் இங்கே வைக்கக் கூடாதென தகராறு செய்தனா். இதுகுறித்து முறையிட்டபோது, போலீஸாரும் அங்கே ஆவின் பூத் வைக்கக் கூடாதென எங்களை விரட்டிவிட்டனா்.

ஆகவே, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாத எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் அல்லது வாழ்வதற்கு வழிசெய்து விடுங்கள் என கண்ணீா் மல்க தெரிவித்தனா். அவா்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் சமாதானப்படுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுமாறு அனுப்பி வைத்தனா்.

இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், அவா்கள் செஞ்சி பகுதியில் ஆவின் பால் பூத் அமைக்கவும், அதற்கான நிதி உதவி வழங்கியும் நடவடிக்கை எடுக்குமாறு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com