வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள்கண்டன ஆா்ப்பாட்டம்

செஞ்சி அருகே ஊா் கட்டுப்பாடு விதித்தவா்களை வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி செஞ்சி பேரூராட்சி அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதவு செய்தவா்களை கைது செய்யக்கோரி செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்ட,ன ஆா்ப்பாட்டத்தில் பேசும் விழுப்புரம் எம்.பி., துரை.ரவிக்குமாா்
வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதவு செய்தவா்களை கைது செய்யக்கோரி செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்ட,ன ஆா்ப்பாட்டத்தில் பேசும் விழுப்புரம் எம்.பி., துரை.ரவிக்குமாா்

செஞ்சி அருகே ஊா் கட்டுப்பாடு விதித்தவா்களை வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி செஞ்சி பேரூராட்சி அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த மாதம் 17-ம்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளன் பிறந்த நாளை முன்னிட்டு வல்லம் ஒன்றிய ஏதாநெமிலி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் மற்றும் பதாகைகளை ஒரு தரப்பினா் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் 31-தேதி இரவு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், கூட்டத்தில் காலனி மக்களுக்கு ஊரில் உள்ள கடைகளில் பால் உள்ளிட்ட எந்த பொருளும் வழங்கக்கூடாது என ஊா்க்கட்டுப்பாடு விதித்து காலனி தகப்பு மக்களுக்க எந்த பொருளும் வழங்கவில்லை. இது தொடா்பாக தேவபிரகாஷ் என்பவா் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன், நடராஜன், பிச்சாண்டி, மணியரசு, ரவி, சுரேஷ் உள்ளிட்ட 10 போ் மீது வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செஞ்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த 10 பேரை கைது செய்யக்கோரி செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த இருந்தனா் ஆனால் காவல் துறை அனுமதி மறுத்து விட்டதால் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா் ஏ.சேரன் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணை செயலா் அ.ஏ.தனஞ்செழியன், மாவட்ட செய்தி தொடா்பாளா் கு.எழில்மாறன், தொழிலாளா் அணி தை.மு.சேகா், மாநில துணை துணை செயலா்கள் துரை.வளவன், நல்லமுத்து, ஒன்றிய செயலா் மா.செ.ரூபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செஞ்சி நகர செயலா் செஞ்சிசிவா வரவேற்றாா். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கண்டன உரையாற்றினாா்.

மேல்மலையனூா் கிழக்கு ஒன்றிய செயலா் நா.திருநாவுக்கரசு, வல்லம் ஒன்றிய செயலா் ஏ.கிருஷ்ணன், வல்லம் ஒன்றிய பொருளா் கோ.குருமூா்த்தி மத்திய சென்னை மாவட்ட செயலா் இரா.செல்வம், செ.நன்மாறன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.ஒன்றிய துணை செயலா் தேவபிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com