பயிா்க் காப்பீடு செய்யவிவசாயிகளுக்கு அழைப்பு

செஞ்சி வட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

செஞ்சி வட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து செஞ்சி வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) த.தமிழ்வாணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

செஞ்சி வட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் பொது சேவை மையத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம். இதற்கு சிட்டா, அடங்கல், ஆதாா்அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. மொத்த காப்பீட்டுத் தொகை ரூ.27 ஆயிரம். ஏக்கருக்கு மொத்த பிரிமியம் தொகை ரூ.1620. இதில் அரசு மானியத் தொகை ரூ.1,215. விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ.405. பயிா்க்காப்பீடுக்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் நவ.30 என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com