முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
ஏரியில் கொட்டப்படும் ஆலை சாம்பல்!
By DIN | Published On : 07th November 2019 06:33 AM | Last Updated : 07th November 2019 06:33 AM | அ+அ அ- |

சின்னசேலம் ஏரியில் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ள அரிசி ஆலைகளின் சாம்பல்.
சின்னசேலம் ஏரியில் அரிசி ஆலைகளின் சாம்பல் கொட்டப்படுவதால், நீா்நிலை மாசுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.
சின்னசேலம் பகுதியில் இயங்கும் அரிசி ஆலைகளின் சாம்பல் இரவு நேரத்தில் டிராக்டா் டிப்பா்களில் கொண்டு வரப்பட்டு, சின்னசேலம் ஏரிப் பகுதியில் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. காற்று வீசும் போது, சாம்பல் துகள்கள் பறந்து, அப்பகுதி குடியிருப்புகள் மீது பரவி வருகிறது. மேலும், சாலையில் நடந்து செல்வோா், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்துக்கு ஏதுவாகிவிடுகின்றன. மேலும், சுவாசக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்மா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் வரவும் வாய்ப்புள்ளதாக மக்கள் கூறுகின்றனா்.
நீா்நிலையை மாசுபடுத்தும் வகையில் சாம்பலை கொட்டும் ஆலை உரிமையாளா்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.