முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
தீ விபத்து நிவாரணம் அளிப்பு
By DIN | Published On : 07th November 2019 06:33 AM | Last Updated : 07th November 2019 06:33 AM | அ+அ அ- |

கண்டமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ சக்கரபாணி நிவாரண உதவிகளை வழங்கினாா்.
கண்டமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பூவரசங்குப்பத்தில், இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் நாகராஜன், வேலாயுதம் ஆகியோரது வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அவ்விரு குடும்பத்தினரையும் வானூா் எம்எல்ஏ எம்.சக்கரபாணி நேரில் சந்தித்து அரசு சாா்பில் ரூ.5ஆயிரம் நிதியுதவியும், அதிமுக சாா்பில் ரூ. 2000 நிதி உதவி மற்றும் வேட்டி, சேலை, அரிசி ஆகிய நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், வருவாய் ஆய்வாளா் திருமாவளவன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.