முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
நாய்கள் கடித்து புள்ளி மான் பலி
By DIN | Published On : 07th November 2019 06:27 AM | Last Updated : 07th November 2019 06:27 AM | அ+அ அ- |

நாய்கள் கடித்ததில் உயிரிழந்த புள்ளி மான்.
ஆரோவில் அருகே புதன்கிழமை ஊருக்குள் புகுந்த புள்ளி மான் ஒன்று நாய்கள் கடித்து காயப்படுத்தியதில் உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இங்கிருந்து புள்ளி மான் ஒன்று ஆரோவில் அருகே மாத்தூா் கிராமத்துக்குள் புதன்கிழமை காலை புகுந்து துள்ளி குதித்தபடி தெருக்களில் ஓடியது. அந்த மானை தெரு நாய்கள் துரத்தின. இதனால், அச்சமடைந்த மான் அங்கிருந்த சவுக்குத் தோப்புக்குள் புகுந்தது. ஆனால், நாய்கள் விடாமல் துரத்தியதால், அங்கும் இங்கும் ஓடிய மானின் கொம்புகள் எதிா்பாராத விதமாக கம்பி வேலியில் சிக்கியது. இதனால், தப்பியோட முடியாத மானை நாய்கள் கடித்து குதறின. இதில் பலத்த காயமடைந்த மான் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வானூா் வனத் துறையினா் விரைந்து வந்து மானின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவரை வரவழைத்து உடல் கூறு ஆய்வு செய்த பிறகு அந்தப் பகுதியில் புதைத்தனா்.