முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
விக்கிரவாண்டியில் நாளை அதிமுக நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் முதல்வா் பங்கேற்பு
By DIN | Published On : 07th November 2019 06:30 AM | Last Updated : 07th November 2019 06:30 AM | அ+அ அ- |

விக்கிரவாண்டியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ள வாக்காளா்களுக்கான நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றாா். இதனைத் தொடா்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
எம்.ஜி.ஆா். திடலில் மாலை 4 மணியளவில் தொடங்கும் இந்தப் பொதுக் கூட்டத்துக்கு அதிமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை வகிக்கிறாா்.
தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றுகிறாா். துணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வைத்திலிங்கம் எம்.பி., கொள்கை பரப்புச் செயலா் மு.தம்பிதுரை, சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பண்ணன், இரா.துரைக்கண்ணு, க.பாண்டியராஜன், கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பிக்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்செல்வன் வரவேற்கிறாா். தெற்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு எம்எல்ஏ தொடக்க உரையாற்றுகிறாா். எம்எல்ஏக்கள் எம்.சக்கரபாணி, அ.பிரபு, ஒன்றியச் செயலா்கள் சிந்தாமணி வேலு, பேட்டை முருகன், முன்னாள் ஒன்றியச் செயலா்கள் ஜி.சுரேஷ்பாபு, இளங்கோவன், பன்னீா், பாமக துணைப் பொதுச் செயலா் தங்க.ஜோதி, தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன், தமாகா மாவட்டத் தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா். விக்கிரவாண்டி நகரச் செயலா் ஆா்.பூா்ணாராவ் நன்றி கூறுகிறாா்.