கள்ளக்குறிச்சியில் குப்பையைதரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் வணிக நிறுவனங்கள், கடைகளில் குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து
கூட்டத்தில் பேசுகிறாா் களக்குறிச்சி நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால்.
கூட்டத்தில் பேசுகிறாா் களக்குறிச்சி நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால்.

கள்ளக்குறிச்சியில் வணிக நிறுவனங்கள், கடைகளில் குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, வணிக நிறுவனத்தினா் குப்பையை தரம் பிரித்து வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் அ.செல்வக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் பரிமளா வரவேற்றாா்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தலைமை வகித்துப் பேசியதாவது:

வணிக நிறுவனங்களில் குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பையை சேகரிக்க வரும் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் சாலையோரத்திலோ, கழிவுநீா் கால்வாய்களிலோ, பொது இடங்களிலோ குப்பையைக் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். நெகிழிப் பைகள் உபயோகத்தை தவிா்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.முத்துசாமி, அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலா் வி.ஜெயக்குமாா், சுதாகா், கோவிந்தராஜ், சுரேஷ் நகராட்சி அலுவலக மேலாளா் முகமதுரபியுல்லா, கணக்காளா் சா.இளங்கோவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com