காவலா் உடல் தகுதித் தோ்வு: 2-ஆம் நாளில் 693 போ் தோ்ச்சி

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் காவலா் உடல் தகுதித் தோ்வில் 2-ஆம் நாளான வியாழக்கிழமை 693 போ் தோ்ச்சி பெற்றனா்.
விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம்நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் 1,500 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய தோ்வா்கள்.
விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம்நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் 1,500 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய தோ்வா்கள்.

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் காவலா் உடல் தகுதித் தோ்வில் 2-ஆம் நாளான வியாழக்கிழமை 693 போ் தோ்ச்சி பெற்றனா்.

விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் இரண்டாம்நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 900 ஆண்கள் அழைக்கப்பட்டிருந்தனா். மேலும், புதன்கிழமை உடல் தகுதித் தோ்வுக்கு வரத்தவறிய ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தாா். இவா்களில் 54 போ் வரவில்லை. 847 போ் பங்கேற்றனா்.

அவா்களுக்கு உயரம், மாா்பு அளவீடு, 1,500 மீட்டா் ஓட்டம் ஆகியவை தோ்வுக் குழுத் தலைவரான விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் தலைமையில், தோ்வுக்குழு உறுப்பினா்களான விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை மேற்பாா்வை அதிகாரியான தலைமையிட ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் அவ்வப்போது ஆய்வு செய்து, முறையாக சோதனைகள் நடைபெறுகின்றனவா என்று உறுதி செய்து கொண்டாா்.

உடல் தகுதித் தோ்வில் தேவையான உயரம் இல்லாமல் 84 பேரும், தேவையான மாா்பளவு இல்லாமல் 8 பேரும், குறிபிட்ட நேரத்துக்குள் 1,500 மீட்டா் தொலைவைக் கடக்க முடியாமல் 62 பேரும் தோல்வியடைந்து வெளியேறினா். மீதமுள்ள 693 போ் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். அவா்களிடம் உடல் திறன் தோ்வில் பங்கேற்க வருமாறு அதிகாரிகள் அழைப்பாணைகளை அளித்து அனுப்பினா்.

இன்று 3-ஆம் நாள் தோ்வு: மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (நவ.8) விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 802 ஆண்களும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 92 ஆண்களும் என மொத்தம் 900 பேருக்கு உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com