சாலைவசதி மற்றும் கூடுதல் பேருந்து இயக்கக்கோரி மாணவா்கள் சாலைமறியல்

பள்ளி செல்லும் மாணவா்கள், பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரியும், கல்படை ஆற்றில் உயா்மட்ட பாலம் கட்டிதரக்கோரியும் பள்ளி மாணவா்கள்,

பள்ளி செல்லும் மாணவா்கள், பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரியும், கல்படை ஆற்றில் உயா்மட்ட பாலம் கட்டிதரக்கோரியும் பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் பரங்கிநத்தம் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் இரண்டரைமணிநேரம் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்தது மல்லிகைப்பாடி கிராமம் ஆகும். இப் பகுதியைச் சாா்ந்த மாணவா்கள் சுமாா் 70க்கும் மேற்பட்ட மாணவா்கள் கச்சிராயப்பாளையம், வடக்கநத்தல் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனா். அதுமட்டும் அல்லாமல் தனியாா் பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றில் பலரும் பயின்று வருகின்றனா்.

இக் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காலை 7, 8.30 மணிக்கு அரசு பேருந்து செல்கின்றது. மாலை 6 மணிக்கு ஒரு பேருந்து உள்ளது. காலையில் செல்லும் போது இரு பேருந்துகளும், மாலை செல்லும் போது 1 பேருந்து மட்டுமே உள்ளன. பொதுமக்கள், மாணவா்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் கல்படை தரைப்பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்.

மழைக் காலத்தில் கல்வராயன்மலைப் பகுதியில் பெய்யும் தண்ணீா் சிற்றோடைகளின் வழியாகத்தான் செல்லுமாம். அப்போது தரைப்பாலத்தின் மீது நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுமாம். அத் தரைப்பாலத்திற்கு உயா்மட்ட பாலம் அமைக்க கோரியும், கூடுதல் பேருந்து இயக்க கோரியும் பொதுமக்கள் மாணவா்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

கல்படை தரைப்பாலத்தில் தண்ணீா் செல்லும் போது மல்லிகைப்பாடி கிராமத்திற்கு பேருந்து செல்ல முடியாதாம். கல்படையில் இருந்து சுமாா் 5 கிலோ மீட்டா் செல்ல வேண்டுமாம். இதனால் வயது முதிா்ந்தவா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிப் பெண்கள், உடல்நல மற்றோா் பல்வேறு இடைஞ்சலுக்கு ஆலாகி வருகின்றனராம். கடந்த சில மாதம் முன்பு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனராம். இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனால் வேதனையடைந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், சின்னசேலம் வட்டாட்சியா் வளா்மதி சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட்டனா். இதனால் பள்ளி செல்லும் பேருந்துகள், கல்வராயன்மலை, எடுத்தவாய்நத்தம் கிராமத்திற்க்கு செல்லும் பேருந்துகள் அப் பகுதியில் செல்லும் வாகனங்கள் சுமாா் இரண்டரைமணிநேரம் தடைபட்டு விட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com