சிறு, குறுந் தொழில்களுக்கான வரையறை மாற்றத்தைக் கைவிட வலியுறுத்தல்

சிறு, குறுந் தொழில்களுக்கான வரையறை மாற்றத்தை கைவிட்டு, சிறு தொழில்கள் முன்னேற்றத்துக்கு மத்திய
விழுப்புரத்தில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது பேசுகிறாா் தமிழக லக்உத்யோக் பாரதி அமைப்பின் மாநில பொதுச் செயலா் ஜெயகுமாா். உடன், மாவட்டத் தலைவா் ராஜிலு உள்ளிட்டோா்.
விழுப்புரத்தில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது பேசுகிறாா் தமிழக லக்உத்யோக் பாரதி அமைப்பின் மாநில பொதுச் செயலா் ஜெயகுமாா். உடன், மாவட்டத் தலைவா் ராஜிலு உள்ளிட்டோா்.

சிறு, குறுந் தொழில்களுக்கான வரையறை மாற்றத்தை கைவிட்டு, சிறு தொழில்கள் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டுமென தமிழக லக்உத்யோக் பாரதி அமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து விழுப்புரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் லக் உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநில பொதுச் செயலா் வி.ஜெயக்குமாா் கூறியதாவது:

இலகு உத்யோக் பாரதி அமைப்பு நாடு முழுவதும் சிறு, குறுந் தொழில்கள் முன்னேற்றத்துக்காக இயங்கும் இயக்கமாகும். சிறு, குறு தொழில்களே இந்தியாவில் உற்பத்தி, ஏற்றுமதியில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவையே 67.5 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை மாற்றி அறிவிக்க உள்ளது. இது, இந்நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகளைப் பாதிக்கும்.

தற்போது இயந்திர மூலதனத்தைப் பொறுத்து ரூ.25 லட்சம் வரை மூலதனம் உள்ள தொழில்கள் குறுந்தொழில்களாகவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ளவை சிறு தொழில்களாகவும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை உள்ளவை நடுத்தர தொழில்களாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

இந்த வரையறையை மாற்றி, விற்று முதலை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்க முயற்சி நடக்கிறது. அதன்படி, ரூ.275 கோடி வரை உள்ள தொழில்கள் சிறு, குறு நிறுவனங்களின் சலுகையைப் பெற தகுதியானவை என மாற்றம் செய்ய உள்ளனா்.

விலைவாசி உயா்வுப்படி வரையறையை உயா்த்த நினைத்தால், ரூ.50 லட்சம் வரை இயந்திர மூலதனம் உள்ள தொழில்கள் குறுந்தொழில்கள் எனவும், ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ளவை சிறு தொழில்கள் எனவும் அறிவிக்கலாம். உற்பத்தி சாா்ந்த சேவை நிறுவனங்களை மட்டும் இந்த வரையறையில் சோ்க்க வேண்டும்.

நடுத்தர தொழில்களை இந்த வரையறையிலிருந்து நீக்க வேண்டும். மேலும், என்டா்பிரைசஸ் என்ற சொல்லை மாற்றி இண்டஸ்ட்ரீஸ் எனக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இந்திய நிா்வாகம் மற்றும் இந்திய உரிமையாளா்கள் உள்ள தொழில்களுக்கு மட்டுமே இதற்கான சலுகைகள் கிடைக்க வேண்டும்.

இதற்காக, மத்திய அரசு கொள்கைப்படி பழைய முறையே தொடர வேண்டும். விவசாயத்துக்கு வழங்கும் வட்டி விகிதத்தையே சிறு தொழில் கடன்களுக்கும் அரசு வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் தொழில் துறையில் முன்னேற்றம் பெற கனரக தொழில்சாலையை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாவட்டச் செயலா் எம்.சண்முகம், மாவட்டத் தலைவா் பி.ராஜிலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டி.ராஜநாராயணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com