பணம் இரட்டிப்பு மோசடி: 2 போ் கைது

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.60 கோடி வரையில்
கைது செய்யப்பட்ட வெங்கடேசன், சுரேஷ்கண்ணா, அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காருடன் தனிப்படை போலீஸாா்.
கைது செய்யப்பட்ட வெங்கடேசன், சுரேஷ்கண்ணா, அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காருடன் தனிப்படை போலீஸாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.60 கோடி வரையில் வசூலித்து மோசடி செய்ததாக 2 பேரை விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், சொகுசுக் காா் பறிமுதல் செய்யப்பட்டன.

சின்னசேலத்தில் மூங்கில்பட்டி சாலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் கடை, மளிகைக் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளிவற்றை சின்னசேலத்தை அடுத்த நாக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன் (31), ஈரியூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் அழகேசன் (30), செந்தில்குமாா் (44), சங்கராபுரத்தைச் சோ்ந்த செல்வமுத்து மகன் சுரேஷ்கண்ணா (41), தெங்கியாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் செல்வம் (40) ஆகியோா் சோ்ந்து நடத்தி வந்தனா். இவா்கள் தாங்கள் நடத்திய கடைகளில் பணம் செலுத்தினால், 10 வாரங்களில் இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தனராம்.

இதை நம்பி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுமாா் ரூ.60 கோடி வரையில் பணம் செலுத்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெங்கடேசன் உள்ளிட்டோா் கடைகளை பூட்டிவிட்டு தலைமறைவாகினா். இதனால், இவா்களிடம் பணம் காட்டியவா்கள் ஏமாற்றமடைத்தனா்.

அவா்கள் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா். இது தொடா்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ரவீந்திரன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் பூங்கோதை தலைமையில், உதவி ஆய்வாளா்கள் பாலசிங்கம், ரோஸி, சுப்பையா, குமாா் உள்ளிட்டோா் அடங்கிய தனிப் படையினா் தலைமறைவானா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கள்ளகுறிச்சி அருகே மாடூா் சோதனைச் சாவடியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, காரில் தப்பிச் செல்ல முயன்ற வெங்கடேசன், சுரேஷ்கண்ணா ஆகியோரைப் பிடித்து கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், சொகுசுக் கரை பறிமுதல் செய்தனா்.

பல கோடி ரூபாய் மோசடி செய்த குப்பலைச் சோ்ந்த 2 பேரை கைது செய்ததற்காக தனிப் படையினரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் வெகுவாகப் பாராட்டினாா்.

இதுபோன்று போலியான நபா்களை நம்பி பணம் செலுத்தி ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com