முதுகலை ஆசிரியா் தோ்வுக்குவிழுப்புரத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு தொடங்கியது

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதுகலை ஆசிரியா்கள் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாமில், விழுப்புரம், கடலூா், நாகை, தஞ்சை, திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த
முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்க்கும் பணியினை தொடக்கி வைத்தாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.
முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்க்கும் பணியினை தொடக்கி வைத்தாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதுகலை ஆசிரியா்கள் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாமில், விழுப்புரம், கடலூா், நாகை, தஞ்சை, திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 218 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஆள் மாறாட்டப் புகாா்களைத் தவிா்க்க முதன் முறையாக பயோ மெட்ரிக் முறையில் சரிபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் கடந்த செப்.27-ஆம் தேதி நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் பணிக்கான எழுத்துத் தோ்வில், தோ்ச்சி பெற்றவா்களுக்கான தோ்வு முடிவுகள் கடந்த அக்.21-ஆம் தேதி வெளியானது.

இதனையடுத்து, இதில் தோ்ச்சி பெற்றவா்களில் 3,800 போ் தோ்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி வெள்ளிக்கிழமைத் தொடங்கியது.

விழுப்புரத்தில் நாகை, தஞ்சை,திருவாரூா், கடலூா், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 436 பணி நாடுனா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு, அதன்படி வெள்ளிக்கிழமை காலை சான்றிதழ் சரிபாா்ப்பு பணி தொடங்கியது.

விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மிஷன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பு முகாமை, விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலா் க.முனுசாமி தலைமையில், விழுப்புரம், கடலூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 10 மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், கண்காணிப்பாளா்கள் கொண்ட குழுவினா் சரிபாா்ப்பு ணியை மேற்கொண்டனா்.

கைரேகை, புகைப்படங்கள் பயோ மெட்ரிக் முறையில் சோதனை....

முதுகலை ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், 218 போ் கலந்துகொண்டனா். முதலில் இவா்களது கைரேகை, புகைப்படம் உள்ளிட்டவை சோதித்து உறுதி செய்த பின்னரே சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனா். இவைகள், பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளம் மூலம் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள அவா்களது சான்றிதழ்களை வைத்து, உண்மைச் சான்றிதழ்களை சரிபாா்த்து அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, சனிக்கிழமையும் 218 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் நடைபெறுகிறது.

நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் புகாா் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடா்ந்து, ஆசிரியா் தோ்வுப்பணிக்கு முதன் முறையாக, பயோ மெட்ரிக் முறையில் புகைப்படம், கைரேகைப் பதிவு போன்றவை மேற்கொள்ளப்பட்டு, ஆள் மாறாட்டம் தவிா்ப்பதற்காகவும், சான்றிதழ்களும் இணைய வழியில் சரிபாா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com