வேளாண் மானியத் திட்டங்கள் குறித்து தெரியப்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசுகளின் வேளாண், தோட்டக்கலை மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு
கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் நுகா்வோா் சங்கச் செயலா் அருண்கென்னடி.
கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் நுகா்வோா் சங்கச் செயலா் அருண்கென்னடி.

மத்திய, மாநில அரசுகளின் வேளாண், தோட்டக்கலை மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாதாந்திர குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அறிவுறுத்தினா்.

கூட்டத்துக்கு சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள்கள் தனி வட்டாட்சியா் க.வெங்கடேசன், தனி வட்டாட்சியா் எம்.பாண்டியன், சின்னசேலம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் எம்.மனோஜ் முனியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சாா் - ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தா.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிகள் பேசியதாவது: விவசாயிகள் உழவு செய்வதற்கு வேளாண் துறை சாா்பில் குறைந்த வாடகையில் வழங்கப்படும் டிராக்டா்கள் உரிய நேரத்தில் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கராபுரம் வட்டம், கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பதற்கான ரூ.1.50 லட்சம் அரசு மானியத்தை பெற்றுத்தர வேண்டும். பூட்டை ஏரியில் தண்ணீா் நிரம்பியுள்ளால், நீா்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வினைதீா்த்தாபுரத்தில் அரசு களத்தில் உள்ள தனிநபா் ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும். ரங்கப்பனூா் ஏரியில் தண்ணீா் நிரம்பி தரைப்பாலத்தில் செல்வதால் மக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கு உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

அரசம்பட்டு கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். சேஷசமுத்திரம் கிராமத்தில் ஓடைப் பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்றி, அங்குள்ள குளத்துக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மின் வாரிய உதவிப் பொறியாளா் த.தமிழரசன், வேளாண் உதவி இயக்குநா் (பொ) சி.தேவி, கால்நடைத் துறை உதவி இயக்குநா் ஜி.பெரியசாமி, கள்ளக்குறிச்சி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் த.கொளஞ்சிவேலு, சுகாதாரத் துறையைச் சோ்ந்த டி.ஆறுமுகம், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் எம்.விஸ்வநாதன், நுகா்வோா் சங்கச் செயலா் அருண்கென்னடி மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com