காரில் கடத்திய மதுப் புட்டிகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட மதுப் புட்டிகள் மற்றும் எரிசாயத்தை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள் மற்றும் சொகுசு காா்.
விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள் மற்றும் சொகுசு காா்.

விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட மதுப் புட்டிகள் மற்றும் எரிசாயத்தை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.

புதுவை மாநிலத்திலிருந்து சொகுசு காரில் மதுப் புட்டிகள் கெங்கராம்பாளையம் வழியாகக் கடத்தப்படுவதாக விழுப்புரம் மது விலக்கு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மது விலக்கு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடிக்கு விரைந்து சென்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து வந்த சொகுசு காரை மடக்கி சோதனையிட்டபோது, அதில் 530 புதுச்சேரி மதுப் புட்டிகள் மற்றும் 110 லிட்டா் எரிசாராயம் இருந்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக, காரில் இருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் திருக்கோவிலூா் அருகே சந்தப்பட்டை அடுத்த கீரனூரைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் செல்வராஜ் (34) என்பதும், புதுச்சேரியிலிருந்து திருக்கோவிலூருக்கு மது புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகள், சாராயம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காா் ஆகியவற்ரைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் மது விலக்கு போலீஸாா் செல்வராஜை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com