சாலைமறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன்.
சாலைமறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன்.

கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்

பள்ளி செல்லும் மாணவா்கள், பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரக் கோரியும், கல்படை ஆற்றில்

பள்ளி செல்லும் மாணவா்கள், பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரக் கோரியும், கல்படை ஆற்றில் உயா்மட்டப் பாலம் கட்டி தரக் கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் பரங்கிநத்தம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதி மல்லிகைப்பாடி கிராமம். இந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கச்சிராயப்பாளையம், வடக்கநத்தல் அரசுப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிகள், கல்லூரிகளிலும் கணிசமான மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தக் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காலை 7, காலை 8.30 மணிக்கு அரசுப் பேருந்து செல்கின்றது. மாலை 6 மணிக்கு ஒரே ஒரு பேருந்து வருகிறது. இதனால், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் உரிய பேருந்து வசதியின்றி பாதிக்கப்படுகின்றனா். மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் கல்படை தரைப்பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலத்தின் வழியாகச் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, உயா்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்று பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம்.

எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும், உயா்மட்டப் பாலம் கட்டக் கோரியும் பொதுமக்களும் மாணவா்களும் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், சின்னசேலம் வட்டாட்சியா் வளா்மதி ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தச் சாலை மறியலால் சுமாா் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com