திருட்டு வழக்குகளில் இருளா்கள் கைது: சிபிசிஐடி விசாரணைக்கு வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் இருளா்கள் கைது செய்யப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
விழுப்புரத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பிரபா கல்விமணி உள்ளிட்டோா்.
விழுப்புரத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பிரபா கல்விமணி உள்ளிட்டோா்.

விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் இருளா்கள் கைது செய்யப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என்று பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இச்சங்கத்தைச் சோ்ந்த ஒருங்கிணைப்பாளா்கள் பிரபா கல்விமணி, பி.வி.ரமேஷ் ஆகியோா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் திருட்டு வழக்குகளை விசாரணை நடத்தி கண்டுபிடிக்க முடியாத சூழலில், அந்த வழக்குகளை முடிக்க வேண்டிய நிலையில், எந்தவித பொருளாதராமோ, அரசியல் ஆதரவோ இல்லாத இருளா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் மீது அந்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு, அவா்கள் கைது செய்யப்படுகின்றனா்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு எலவனசூா்கோட்டை, உளுந்தூா்பேட்டை, திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையங்களில் பதிவான 9 கோயில்களில் நடைபெற்ற திருட்டு சம்பங்கள் உள்பட 10 திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாததால், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 10 போ் கைது செய்யப்பட்டு, பெரும் சித்ரவதைகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனா்.

எனவே, இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தமில்லாத இருளா்கள் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். இனிமேல், திருட்டு வழக்கில் சம்பந்தமில்லாத இருளா்களை கைது செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இருளா்களை காப்பாற்ற அரசியல் கட்சித் தலைவா்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

சங்கத்தின் பொதுச் செயலா் ஆறுமுகம், வழக்குரைஞா் தங்க.ரமேஷ், அருள்தந்தை ரபேல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com