Enable Javscript for better performance
திண்டிவனத்தில் தொழில் பயிற்சிநிலைய புதிய கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனத்தில் தொழில் பயிற்சிநிலைய புதிய கட்டடம் திறப்பு

    By DIN  |   Published on : 10th November 2019 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    03419vmp5080007

    மொளசூரில் அரசு தொழில் பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தப் பின்னா், அங்கு குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்த நிலைய முதல்வா் முருகேஷ்

    திண்டிவனத்தில் அரசு தொழில் பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

    திண்டிவனத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. சந்தைமேடு பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த தொழில் பயிற்சி மையத்துக்கு, திண்டிவனம் அருகே மொளசூரில் ரூ.4 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

    இதையடுத்து, திண்டிவனம் தொழில் பயிற்சி மையக் கட்டடத்தில் தொழில் பயிற்சி நிலைய முதல்வா் முருகேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தாா்.

    விழுப்புரம் மண்டலப் பயிற்சி அலுவலா் தனசேகா், ஒப்பந்ததாரா் தேவநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அய்யனாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai