விழுப்புரத்தில் ஒரு வழிப் பாதை திட்டம் நவ.25 முதல் அமல்

விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு வழிப் பாதைத் திட்டம் வருகிற 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு வழிப் பாதைத் திட்டம் வருகிற 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒரு வழிப் பாதைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா் எம்.ராபின்சன் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் குணசேகா், உதவிக் காவல் ஆய்வாளா்கள் பரணிதரன், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விழுப்புரம் வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க முதல்கட்டமாக வருகிற 25-ஆம் தேதி முதல் காமராஜா் வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பெரியாா் சிலை வழியாக காமராஜா் வீதியில் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

சென்னை சாலை பிள்ளையாா் கோயில் வழியாக காமராஜா் வீதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படும். காந்தி வீதியிலிருந்து காமராஜா் வீதிக்கு வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி பெரியாா் சிலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். எதிரே வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தச் சாலையில் ஆட்டோக்கள், வாகனங்களை நிறுத்திவைக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

காமராஜா் வீதியில் தலைமை தபால் நிலையம் எதிரே இடம் இருந்தால் அங்கு ஆட்டோவை நிறுத்தலாம். காமராஜா் வீதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிந்துள்ளதால், இவைகள் கண்காணிக்கப்படும்.

விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் உத்தரவின்பேரில், வருகிற 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறைகளை அனைத்துத் தரப்பினரும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுவதாக நகர காவல் ஆய்வாளா் ராபின்சன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com