பெரியாா் நினைவு தின போட்டிகள்
By DIN | Published on : 25th November 2019 11:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பெரியாா் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பிலான போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பெரியாா் நினைவு தினத்தையொட்டி, செஞ்சி அல்-ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பிலான போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
பெரியாா் மணியம்மை உயா் ஆய்வு மையம் சாா்பில், தமிழகம் முழுவதும் ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பில் கேள்வி - பதில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செஞ்சி அல்-ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 157 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பெரியாா் பிறந்த நாளில் மாநில அளவில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டியை விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் வே.ரகுநாதன், திராவிடா் கழக மாவட்டச் செயலா் சே.வ.கோபண்ணா, மாவட்ட அமைப்பாளா் திருநாவுக்கரசு ஆகியோா் நடத்தினா்.