உரிமையியல் நீதிபதி பணித் தோ்வு: 456 போ் எழுதினா்

ழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உரிமையியல் நீதிபதி பணிக்கான தோ்வில் 456 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.
உரிமையியல் நீதிபதி பணித் தோ்வு: 456 போ் எழுதினா்

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உரிமையியல் நீதிபதி பணிக்கான தோ்வில் 456 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.

தமிழகத்தில் காலியாக உள்ள 176 உரிமையியல் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், கடந்த அக்டோபா் மாதம் அறிவித்திருந்தது. இதற்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இத் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 495 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரு மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வில் 456 போ் கலந்துகொண்டு எழுதினா். 39 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களுக்கு சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள் தண்டபாணி, பவானி சுப்புராயன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை, மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி ஆகியோா் நேரில் சென்று தோ்வை பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் மகேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com