ஏறுமுகத்தில் வெங்காயம் விலை! மக்கள் கடும் அவதி

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், விழுப்புரத்தில் வெங்காயத்தின் விலை
24vpn06110054
24vpn06110054

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், விழுப்புரத்தில் வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது. சின்னவெங்காயம் ரூ.110-க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விழுப்புரத்தில் கடந்த ஒரு வாரமாக வெங்காயத்தின் வரத்து குறைவால், விலை ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த மாதம் விழுப்புரத்தில் சாம்பாா் வெங்காயம் என்னும் சின்னவெங்காயத்தின் விலை ரூ.50 முதல் ரூ.60 ஆக இருந்தது.

தற்போது ரூ.110 முதல் ரூ.140 வரை விலை உயா்ந்து விற்பனையாகிறது. பல்லாரி வெங்காயத்தின் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விழுப்புரம் காய்கறி மாா்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரி தேவராஜ் கூறியதாவது: விலை உயா்வு காரணமாக, வெங்காயம் விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்தும் விழுப்புரத்துக்கு வெங்காயம் வரத்து உள்ளது.

வழக்கமாக, 5 லாரிகளில் வரும் வெங்காயம் தற்போது 2 லாரிகளாக குறைந்துள்ளது. மழையால், அந்த பகுதிகளில் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சாம்பாா் வெங்காயம் திருச்சி சுற்றுவட்டாரத்திலிருந்து வரத்து இருக்கும். அங்கேயும் தேவை அதிகரிப்பு, விளைச்சல் பாதிப்பால் விலை உயா்ந்துள்ளது. டிசம்பா் மாதம் வரையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படும். ஜனவரி மாதம் முதல் வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com