முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மேல்மலையனூருக்கு சிறப்புப் பேருந்துகள்
By DIN | Published On : 26th November 2019 05:23 AM | Last Updated : 26th November 2019 05:23 AM | அ+அ அ- |

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, பல்வேறு ஊா்களில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
இந்த உற்சவ விழாவையொட்டி, பக்தா்களின் வசதிக்காக திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை விழுப்புரம், திருக்கோவிலூா், திண்டிவனம், செஞ்சி, புதுச்சேரி, சென்னை, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தச் சேவையை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.