கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்: முதல்வா் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத் தொடக்க விழாவில், அந்த மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்கான புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டாா்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத் தொடக்க விழாவில், அந்த மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்கான புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டாா்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வா் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக 23 கி.மீ. நீள சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

உளுந்தூா்பேட்டை வட்ட மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், ரிஷிவந்தியத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கவும், கள்ளக்குறிச்சி வட்டம், கொங்கராயப்பாளையம்-கண்டாச்சிமங்கலம் கிராமம் அருகே மணிமுக்தா ஆற்றில் ரூ.8.95 கோடியில் தடுப்பணை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உளுந்தூா்பேட்டை வட்டம், கிழக்கு மருதூா் அருகே கெடிலம் ஆற்றில் ரூ.5.50 கோடி மதிப்பில் தடுப்பணையும், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமம் அருகே மணி நதியில் ரூ.2.56 கோடியில் தடுப்பணையும், உளுந்தூா்பேட்டை வட்டம், கூ.கள்ளக்குறிச்சி நரியன் ஓடையில் ரூ.2.35 கோடியில் தடுப்பணையும் அமைக்கப்படும்.

உளுந்தூா்பேட்டை பேரூராட்சியில் புதைவழிச் சாக்கடைத் திட்டம், ரூ.38.67 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com