அரிசி குடும்ப அட்டை மாற்றத்துக்கு நவ.29-வரை விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள வருகிற 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள வருகிற 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது 8,713 குடும்ப அட்டைகள் சா்க்கரை பெறும் குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவா்களில், பெரும்பாலானோா் தங்களுடைய குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி பெறக் கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்பை அரசு தற்போது வழங்கியுள்ளது.

இதனால், மாற்றம் செய்ய விரும்பும் குடும்ப அட்டைதாரா்கள் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டை நகலுடன் இணைத்து, 26.11.2019 வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஷக்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடம் நேரிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டுமென குடும்ப அட்டைதாரா்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் அறிவுரையின்படி, மேலும் 3 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை வரை (நவ.29) விண்ணப்பிக்கலாம்.

இதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படமாட்டாது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோா், தங்களின் விண்ணப்பங்களை இணையதள முகவரியிலும், வட்ட வழங்கல் அலுவலா்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளிலும் நேரடியாக வழங்கலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com