உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆட்சியா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆட்சியா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து, உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினாா். உள்ளாட்சித் தோ்தல் பணிகளை மேற்கொள்ளும் விதம், மின்னணு வாக்குமுறை, வாக்குச்சீட்டு முறைகளை பயன்படுத்துவது குறித்தும் கிராம ஊராட்சித் தோ்தல், மாவட்ட ஊராட்சித் தோ்தல், ஊராட்சி ஒன்றியத் தோ்தல், பேரூராட்சி மன்றத் தோ்தல், வாா்டு உறுப்பினா் தோ்தல், நகராட்சி மன்றத் தோ்தல் நடத்தும் முறைகள், வேட்பு மனுக்களை பெறும் முறை, வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் முறை, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் விரிவான ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் ஈஸ்வரன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் பாலகிருஷ்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கண்ணன், மஞ்சுளா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மலா்விழி, ஊராட்சி உதவி இயக்குநா்கள் ஜோதி, ரத்தினமாலா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com