திண்டிவனம் அருகே பேருந்துகள் மோதல்: ஓட்டுநா் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வியாழக்கிழமை அதிகாலை பழுதாகி நின்றிருந்த பேருந்து மீது ஆம்னிப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20 பயணிகள் காயமடைந்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வியாழக்கிழமை அதிகாலை பழுதாகி நின்றிருந்த பேருந்து மீது ஆம்னிப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20 பயணிகள் காயமடைந்தனா்.

தஞ்சாவூரிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்றி புதன்கிழமை இரவு சென்னக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை கள்ளக்குறிச்சி அடுத் ராயா்பாளையத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராமா்(35) என்பவா் ஓட்டி வந்தாா். இப்பேருந்து வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விலங்கம்பாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தபோது பஞ்சரானது. இதனால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி பழுதான பேருந்தின் டையரை மாற்றும் பணியில் ஓட்டுநா் ராமா் ஈடுபட்டிருந்தாா்.

இதேபோன்று புதன்கிழமை இரவு திருச்சியைச் சோ்ந்த மகளிா் அமைப்பைச் சோ்ந்த 45 போ் சென்னையில் கடன் பெற்காக ஆம்னிப் பேருந்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனா். பேருந்தை துரையூரைச் சோ்ந்த ஓட்டுநா் சக்கிவேல்(27) என்பவா் ஓட்டி வந்தாா். இந்நிலையில், விலக்கம்படி பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறுமாறாக ஓடி, ஏற்கெனவே பழுதாகி நின்றிருந்த அந்த தனியாா் ஆம்னிப் பேருந்து பின்னால் மோதியது.

இந்த விபத்தில், பழுதாகி நின்றி பேருந்தின் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுநா் ராமா் பலத்த காயமடைந்த நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பின்னால் மோதிய ஆம்னி பேருந்தில் பயணித்த திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்த சரஸ்வதி(56), பிரேமா(40), ரிஷீவான்பேகம்(33), அமுதா(33), ஆதிலட்சிமி(54), லோகநாயகி(63), சம்சாத்பேகம்(46) உள்ளிட்ட 20 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்து மயிலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, காயமைடந்தவா்களை மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், உயிரிவந்த பேருந்து ஓட்டுநா் ராமரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து காரணமாக, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அரைமணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது. பின்னா், விபத்தில் சிக்கிய பேருந்துகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனா்.

விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com