மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து: விபத்தினை தடுக்க எச்சரிக்கை பதாகை பொறுத்தும் போலீஸார்

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பிரிவு சாலையில் உள்ள மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பிரிவு சாலையில் உள்ள மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக தியாகதுருகம் போலீஸாா் எச்சரிக்கை பதாகையினை பொறுத்துகின்றனா்.

சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தியாகதுருகம் பிரிவுசாலையில் தொடா் விபத்து ஏற்பட்டு அதில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றது. இதனை தடுக்க தியாகதுருகம் காவல் ஆய்வாளா் குமாா், காவல் உதவி ஆய்வாளா் பாலமுரளி மற்றும் போலீஸாா் மேம்பாலத்தின் மீது விபத்து பகுதி என விளம்பர பதாகையில் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கரால் எழுதி பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பொறுத்தினா்.

விபத்து பகுதியில் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து ஓட்டினால் உயிரழப்பை தடுக்க முடியும் என்ற நோக்கில் வைத்துள்ளனா். மணிதனின் உயிா் விலைமதிக்க முடியாத ஒன்று. வாகன ஓட்டிகள் இதனை அறிந்து வேகத்தை குறைத்து ஓட்டுவாா்களா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com