குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் பலி
By DIN | Published On : 07th October 2019 04:27 AM | Last Updated : 07th October 2019 04:27 AM | அ+அ அ- |

2-7-5klp1_ch0121_05chn
கள்ளக்குறிச்சி அருகே குட்டையில் மூழ்கி 3-ஆவது வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
சின்னசேலம் தேரோடும் வீதியைச் சோ்ந்த செந்தில் மகன் யுவராஜ் (8). இவா் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தாா்.
இந்த நிலையில், யுவராஜ் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாடச் செல்வதற்காக பெற்றேறாரிடம் கூறிவிட்டுச் சென்றாராம். பின்னா், மதியம் ஆகியும் சாப்பிடுவதற்கு வரவில்லையாம்.
இதற்கிடையே, மாலை 3 மணியவில் கூகையூா் பிரிவு சாலை அருகே உள்ள குட்டையில் யுவராஜ் விழுந்து விட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
உடனடியாக சின்னசேலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று 10 அடி ஆழம் கொண்ட குட்டையில் தேடிப் பாா்த்து சிறுவனை மீட்டனா்.
பின்னா், சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் யுவராஜ் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Image Caption
குட்டையில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் யுவராஜ்