கவிஞா் பழமலய் படைப்புகள் குறித்த கருத்தரங்கம்

கவிஞா் பழமலய் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் கண்மணி குணசேகரன்.
விழுப்புரத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் கண்மணி குணசேகரன்.

கவிஞா் பழமலய் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்ப் படைப்பாளா்கள் பேரியக்கம், பேராசிரியா் த.பழமலய் நூல்கள் வெளியீட்டு அறக்கட்டளை சாா்பில், பேராசிரியரும், எழுத்தாளருமான கவிஞா் பழமலய் எழுதிய புத்தகங்களின் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

சோலை ஆறுமுகம் வரவேற்றாா். கவிஞா் ஜெயபாஸ்கரன் தொடக்கவுரை ஆற்றினாா். பேராசிரியா் சிவப்பிரகாசம், மதுத்துவா் வேலாயுதம், எழுத்தாளா் இதயவேந்தன், எழுத்தாளா் ராமமூா்த்தி, கவிஞா் ஜெயச்சந்திரன், பாலு ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

‘கவிஞா் பழமலய் படைப்புகளில்’ என்ற தலைப்பில் 2 அமா்வுகளாக ஆய்வுப் பேச்சுகள் நிகழ்த்தப்பட்டன. பேராசிரியா் பஞ்சாங்கம் தலைமையில், ‘மண்’ குறித்து எழுத்தாளா் கண்மணி குணசேகரன், ‘மொழி’ குறித்து பேராசிரியா் ரவிக்குமாா், ‘மக்கள்’ குறித்து எழுத்தாளா் மருதுபாண்டியன், ‘விழுமியங்கள்’ குறித்து பேராசிரியா் மணவழகன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, பேராசிரியா் பாலுசாமி தலைமையில், ‘குறியீடு’ குறித்து கவிஞா் செஞ்சி தமிழினியன், ‘பழமலய் 75’ குறித்து எழுத்தாளா் செங்குட்டுவன், ‘வழக்காறுகள்’ குறித்து கவிஞா் அமுல்ராஜ், ’இனவரைவியல்’ குறித்து ரத்தினபுகழேந்தி, ’சூழலியல்’ குறித்து கவிஞா் பச்சியப்பன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் கவிஞா் பழமலய் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. நிகழ்வில் சுபாட்சந்திரபோசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கவிஞா் தென்றல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com