Enable Javscript for better performance
இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பது தவறான கருத்து: கே.என்.நேரு- Dinamani

சுடச்சுட

    

    இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பது தவறான கருத்து: கே.என்.நேரு

    By DIN  |   Published on : 09th October 2019 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது தவறான கருத்து என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து, விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் செவ்வாய்க்கிழமை கே.என்.நேரு பிரசாரம் செய்தார். 
    பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்று திமுக வெற்றி பெறப்போவது உறுதி. இந்தத் தேர்தல், வரவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம்.
    இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது தவறான கருத்து. அண்மையில், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில், 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால்தான், திட்டப் பணிகள் தொடரும் என ஆளும் கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். 
    ஆனால், திமுக வெற்றி பெற்றால் நல்லதொரு ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்று நாங்கள் பிரசாரம் செய்கிறோம்.
    தேர்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றதாக அதிமுகவினர் கூறுகின்றனர். திமுக ஏற்கெனவே அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றிருந்தால், விவசாயக் கடன்கள், நகைக் கடன்களை தள்ளுபடி செய்திருப்போம். எனினும், அவர் முதல்வரானவுடன் திமுக அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்றார்.
    தொடர்ந்து, அவர் வி.சாலை, கொங்கராம்பூண்டி, மேலக்கொந்தை, ஆசூர், புதுப்பாளையம்,தென்பேர், சின்னதச்சூர் , எசாலம் ,எண்ணாயிரம், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, செ.குண்ணத்தூர், முட்டத்தூர் உள்ளிட்ட கிராம வீதிகளில், வேட்பாளருடன் திறந்தவெளி வேனில் சென்று கே.என்.நேரு ஆதரவு திரட்டினார்.
    திமுக மாவட்டச் செயலர் கே.எஸ்.மஸ்தான், எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, கிருஷ்ணசாமி, விஜயன் எம்.பி.,  ஒன்றியச் செயலர் வேம்பி ரவி, இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன், எத்திராசன் உள்ளிட்ட கட்சியினர் திரளாகக் கலந்து
    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai