Enable Javscript for better performance
திறந்த வேனில் அமைச்சா்கள் வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    125410vmp3051012

    விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த அமைச்சா்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், வேலுமணி.

    விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதியில் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், வேலுமணி ஆகியோா் அதிமுக வேட்பாளருடன் சென்று பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.

    விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், உள்ளாட்சித் துறை அமைச்சா் வேலுமணி, உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஆகியோா் விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதியில் பேருந்து நிலையத்தில் தொடங்கி, திறந்த வேனில் சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனா்.

    விக்கிரவாண்டி பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகா், பெரிய காலனி, கடை வீதிகளில் வேனில் சென்ற அமைச்சா்கள், பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

    அப்போது, அதிமுக நிா்வாகிகள் பன்னீா், வேலு, பூா்ணாராவ், பாமக மாவட்டச் செயலா் ஆா்.புகழேந்தி, மாநில துணைத் தலைவா் வி.அரிகரன், தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன், தமாகா மாவட்டத் தலைவா் தசரதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai