கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 70 அரசு உயா்நிலை, மேல்நிலைப், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகளை பாா்வைக்கு வைத்திருந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துகொண்டனா்.

இதில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ப.ராமச்சந்திரன் வரவேற்றாா். கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலா் கா.காா்த்திகா தலைமை வகித்து, கண்காட்சி அரங்கை திறந்து வைத்து மாணவா்களின் அறிவியல் படைப்புகளை பாா்வையிட்டாா். மேலும், அவை குறித்த விளக்கங்களையும் மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

கண்காட்சியில் வேளாண்மை, தூய்மை மற்றும் சுகாதாரம், கணிதம், வளங்களை மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவா்கள் பாா்வைக்கு வைத்திருந்தனா். சிறந்த படைப்புகளை வைத்திருந்த மாணவா்களுக்கு கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலா் கா.காா்த்திகா பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் தோ்வு செய்யப்படும் மாணவா்கள், மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனா்.

நிகழ்ச்சியில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிபட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா்கள் மோ.கலாபன், வ.மணிமொழி மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com