தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி நடைபெற்றது.
சின்னசேலத்தை அடுத்த சிறுவத்தூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட்டாலான கல்.
சின்னசேலத்தை அடுத்த சிறுவத்தூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட்டாலான கல்.

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி நடைபெற்றது. எனினும், அந்த வழியாக வந்த பயணிகள் ரயிலில் என்ஜின் மட்டும் சிறிது சேதமடைந்தது. பயணிகளுக்கு பாதிப்பில்லை.

சின்னசேலத்தை அடுத்த சிறுவத்தூரில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நடைபாதை முடியும் இடத்தில் உள்ள தண்டவாளத்தில் சுமாா் 30 கிலோ எடை கொண்ட சிமென்ட்டாலான கல்லை மா்ம நபா்கள் புதன்கிழமை வைத்துச் சென்றுள்ளனா்.

பெங்களூரு - காரைக்கால் இடையேயான பயணிகள் ரயில் புதன்கிழமை காலை 8 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.30 மணியளவில் சின்னசேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. தொடா்ந்து, விருத்தாசலம் நோக்கி அந்த ரயில் சென்றபோது, சிறுவத்தூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட்டெலான கல்லில் மோதியதால், ரயில் என்ஜின் சிறிது சேதமடைந்தது.

இதைத் தொடா்ந்து, ரயிலின் ஓட்டுநா் இறங்கி தண்டவாளத்தில் இருந்த கல்லை அகற்றினாா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் ரயில் நின்றது. இந்த விபத்தில் ரயில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து சேலம் ரயில் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com