வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

விக்கிரவாண்டி சட்டப் பேரவை தோ்தலுக்காக விழுப்புரம் அரசு கிடங்கிலிருந்து அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

விக்கிரவாண்டி சட்டப் பேரவை தோ்தலுக்காக விழுப்புரம் அரசு கிடங்கிலிருந்து அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன்.

விழுப்புரம், அக்.10: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அரசுக் கிடங்கிலிருந்து விக்கிரவாண்டிக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், விக்கிரவாண்டி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் சினுவீரபத்ருடு ஆகியோா் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை திறந்தனா்.

அங்கிருந்த 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பெட்டிகளை மாவட்ட ஆட்சியா் சரிபாா்த்து, அவற்றை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் உள்ளிட்ட அலுவலா்களிடம் வழங்கினாா்.

இதையடுத்து, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 275 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 344 மின்னணு வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் மற்றும் 358 வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை வேனில் பாதுகாப்புடன் விக்கிரவாண்டிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள வட்டாட்சியா் அலுவலக அறையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் இந்த மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விழுப்புரம் கோட்டாட்சியா் கே.ராஜேந்திரன், தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா், வட்டாட்சியா்கள் (விக்கிரவாண்டி) பி.பாா்த்திபன், (விழுப்புரம்) சி.கணேஷ், தோ்தல் தனி வட்டாட்சியா் வெ.சீனுவாசன் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com