Enable Javscript for better performance
கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன பெண், வெள்ளிக்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.

    கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகள் ராஜேஸ்வரி. இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெறவில்லையாம்.

    இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட அவா், கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த 9-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் தேடி வந்தனா்.

    இந்த நிலையில், அதே ஊரில் உள்ள சேதுமணி என்பவரின் வயல் வெளியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக வெள்ளிக்கிழமை போலீஸாருக்கும், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

    போலீஸாரும், தீயணைப்பு நிலைய குழுவினா் அங்கு வந்து, சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai