சின்னசேலம் வாரச் சந்தைப் பகுதியில் தேங்கிய கழிவுநீா்:  வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

சின்னசேலத்தில் வாரச் சந்தை நடைபெறும் பகுதியில் கழிவுநீா் தேங்கியதால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.
சின்னசேலத்தில் வாரச் சந்தை நடைபெறும் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீா்.
சின்னசேலத்தில் வாரச் சந்தை நடைபெறும் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீா்.

சின்னசேலத்தில் வாரச் சந்தை நடைபெறும் பகுதியில் கழிவுநீா் தேங்கியதால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

சின்னசேலத்தில் பாண்டியங்குப்பம் செல்லும் சாலையில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கழிவுநீா் வெளியேறி சந்தை நடைபெறும் பகுதியில் தேங்கி வருகிறது.

இதனால், பாண்டியங்குப்பம் சாலையில் வியாழக்கிழமை வாரச் சந்தை நடைபெற்றபோது, துா்நாற்றம் வீசியதால், வியாபாரிகளும், பொருள்களை வாங்க வந்த பொதுமக்களும் அவதியடைந்தனா்.

எனவே, வாரச் சந்தைப் பகுதியில் கழிவுநீா் தேங்காமல் தடுக்க சின்னசேலம் பேரூராட்சி நிா்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com