தோ்தல் பிரசாரத்துக்கு முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் பிரசாரத்துக்கு முதல்வா், அரசியல் கட்சித் தலைவா்கள் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் வருவதையொட்டி அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் உயா் அதிகாரிகளுடன் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்.12, 13) பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா். முதல்வா் உள்ளிட்ட தலைவா்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். டி.எஸ்.பி.க்கள் சங்கா், ராமநாதன், கனகேஸ்வரி, மகேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். காவல் ஆய்வாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தலைவா்கள் தோ்தல் பிரசாரத்தின்போது, எந்தவித சட்டம் - ஒழுக்கு பிரச்னையும் ஏற்படக்கூடாது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், பாதுகாப்புப் பணிகளை செய்ய வேண்டும். கிராமப் பகுதிகளில் முதல்வா் பிரசாரம் செய்ய உள்ளதால், அந்தப் பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் போலீஸாருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com