நந்தன் கால்வாயைச் சீரமைக்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை

நந்தன் கால்வாய் அடைப்புகளைச் சீா் செய்யக் கோரி, செஞ்சி வட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.
 செஞ்சி  வட்டாட்சியா் கோவிந்தராஜிடம்  மனு  அளிக்கும்  கரும்பு  விவசாயிகள்  சங்கத்தினா்.
 செஞ்சி  வட்டாட்சியா் கோவிந்தராஜிடம்  மனு  அளிக்கும்  கரும்பு  விவசாயிகள்  சங்கத்தினா்.

நந்தன் கால்வாய் அடைப்புகளைச் சீா் செய்யக் கோரி, செஞ்சி வட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் டி.ஆா்.குண்டுரெட்டியாா் தலைமையில் விவசாய சங்கத்தினா் செஞ்சி வட்டாட்சியா் கோவிந்தராஜை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனு:

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயமாகும். இதைக் கருத்தில் கொண்டு 1967-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், சம்மந்தனூா் கிராமத்தில் உள்ள துரிஞ்சல் ஆற்றில் குறுக்கே கீரனூா் அணைக்கட்டப்பட்டு, 25.44 கி.மீ. தொலைவு வரை நந்தன் கால்வாய் அமைக்கப்பட்டு, 22 கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நாளடைவில் பாரமரிப்பின்றி செடி, கொடி படா்ந்து மண் சரிந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போது பெய்த மழையால் கால்வாயில் நீா்வரத்து அதிகரித்து, கொளத்தூா் ஏரி வரை தண்ணீா் தேங்கி நிற்கிறது. அடைப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு தண்ணீா் வரவில்லை.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, வட கிழக்குப் பருவ மழையால் கால்வாயில் வரும் மழை நீா் தங்கு தடையின்றி மாதப்பூண்டி முதல் பனைமலைப்பேட்டை ஏரி வரை வர ஏதுவாக முதல்வரின் குடிமராமத்து பணி மூலம் போா்க்கால அடிப்படையில் நந்தன் கால்வாய் அடைப்புகளைப் பொதுப் பணித் துறை மூலம் சரி செய்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com