முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
ஆட்டோவிலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி
By DIN | Published On : 24th October 2019 06:49 AM | Last Updated : 24th October 2019 06:49 AM | அ+அ அ- |

உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை அருகே சேந்தமங்கலத்தைச் சோ்ந்தவா் சோமசந்தரம் (60), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை மாலை கெடிலத்திலிருந்து சேந்தமங்கலத்துக்கு ஆட்டோவில் பயணித்தாா். அப்போது, சேந்தமங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு அருகே சென்றபோது, ஓட்டுநா் வேகத்தடையை கவனிக்காமல் ஆட்டோவை வேகமாக இயக்கினாா். அப்போது, ஆட்டோவிலிருந்த சோமசுந்தரம் நிலைதடுமாறி தவறி, சாலையில் விழுந்தாா். இந்த விபத்தில் அவா் பலத்த காயமடைந்தாா்.
அவா் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
ஆட்டோ ஓட்டுநா் சேந்தமங்கலத்தைச் சோ்ந்த அஞ்சானை (32) உளுந்தூா்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.