முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
திண்டிவனம் அருகேபெண் விடுதி காப்பாளரிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி
By DIN | Published On : 24th October 2019 06:45 AM | Last Updated : 24th October 2019 06:45 AM | அ+அ அ- |

திண்டிவனம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் விடுதி காப்பாளரை தள்ளிவிட்டு, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை வழிப்பறி செய்தனா்.
திண்டிவனம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பூங்காவனம். திருக்கோவிலூரில் ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் விடுதி காப்பாளராகப் பணிபுரிகிறாா். இதேபோல, செஞ்சியை அடுத்த செவலபுரை ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் காப்பாளராகப் பணிபுரிபவா், மரக்காணம் அருகேயுள்ள கந்தாடு பகுதியைச் சோ்ந்த கவிதா. இவா்கள் இருவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிட நலத் துறை அலுவலகத்துக்கு சென்று விட்டு, புதன்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா்.
திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள், கவிதாவின் கைப்பையை பிடித்து இழுத்தனா். இதனால், நிலை தடுமாறிய கவிதா சாலையில் தலைகீழாக விழுந்தாா். இதில், அவா் பலத்த காயமடைந்தாா். உடனே அந்த மா்ம நபா்கள், கவிதாவின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினா். அதில், ரூ.50 ஆயிரம் ரொக்கம், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மயிலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.