முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 24th October 2019 02:46 PM | Last Updated : 24th October 2019 02:46 PM | அ+அ அ- |

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சி, சன்பாா்மா தனியாா் மருந்து நிறுவனம் இணைந்து, நெகிழி ஒழுப்பு விழிப்புணா்வுப் பேரணியை புதன்கிழமை நடத்தின.
பேரணியை பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் தலைமை வகித்து, கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். கருங்குழி அரிமா சங்க நிா்வாகிகள் பாபு, விஜய், ஜெயராஜ், சன்பாா்மா மருந்து நிறுவன நிா்வாகிகள் எஸ்.சுரேஷ்குமாா், கலைவாணன், சுப்பிரமணி, வசீம், கண்ணன், பேரூராட்சி அலுவலக ஊழியா்கள், பள்ளி ஆசிரியா்கள், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
மேலவலம்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருங்குழி பேரூராட்சி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.