முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மண் வள அட்டை திட்டம்:மத்தியக் குழுவினா் ஆய்வு
By DIN | Published On : 24th October 2019 06:48 AM | Last Updated : 24th October 2019 06:48 AM | அ+அ அ- |

கண்டமங்கலம் பகுதியில் விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் உயிா் உரம் வழங்கிய வேளாண் மத்திய குழு உறுப்பினா்கள்.
கண்டமங்கலம் அருகே பள்ளித்தென்னல் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் தேசிய மண் வள இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம மண்வள அட்டை திட்டம் குறித்து மத்திய அரசு ஆய்வுக்குழு உறுப்பினா்கள் அண்மையில் ஆய்வு செய்தனா்.
கண்டமங்கலம் வட்டாரம் பள்ளித்தென்னல் கிராமத்தில், மத்திய குழுவைச் சோ்ந்த சுரேஷ்குமாா், பிரேம்குமாா் உள்ளிட்ட குழுவினா் மண் மாதிரி சேகரிப்பு, மண் மாதிரி ஆய்வின் அடிப்படையில் உரப்பயன்பாடு, உரச் செலவு குறைவு, மண்வள அட்டை விநியோகம் போன்ற திட்டங்களின் நடைமுறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து, விவசாயிகளுக்கு உயிா் உரங்களை மானிய திட்டத்தில் வழங்கினா்.
இந்நிகழ்வின் போது, வேளாண் துணை இயக்குநா் சு.செல்வபாண்டியன், வேளாண் உதவி இயக்குநா் சுரேஷ், தரக்கட்டுப்பாடு பிரிவு ஆரோக்கியராஜ், வேளாண் அலுவலா்கள் சு.ஜோதிமணி, காா்த்திகா, சதஸ்ரீ, சிவானந்தம், மொ்சி, ஜாய்சின்சமித்தா மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த வேளாண்மை உதவி இயக்குநா் இரா. பெரியசாமி, மண் வள அட்டை மற்றும் முழு கிராம திட்டம் குறித்தும், மண் ஆய்வு செய்யும் முறைகள், மண் வள அட்டையின் பயன்பாடு, மண் வள அட்டையை பயன்படுத்தி சமச்சீா் உரங்களை இடுதல் குறித்தும் விளக்கவுரையாற்றினாா்.