கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கள்ளக்குறிச்சி அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் வியாழக்கிழமை தவறி விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.
கிணற்றில் தவறி விழுந்த பசுவை கயிறு கட்டி மீட்கும் தியாகதுருகம் தீயணைப்புப் படையினா்.
கிணற்றில் தவறி விழுந்த பசுவை கயிறு கட்டி மீட்கும் தியாகதுருகம் தீயணைப்புப் படையினா்.

கள்ளக்குறிச்சி அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் வியாழக்கிழமை தவறி விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கலையநல்லூா் காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த நன்னி மகன் இளையராஜா. இவா், தனது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறாா்.

இவருக்குச் சொந்தமான பசு வியாழக்கிழமை பிற்பகல் அவரது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. அந்தக் கிணற்றில் தற்போது சுமாா் 10 அடி அளவே தண்ணீா் உள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தைச் சோ்ந்த அருணாச்சலம், சுரேஷ், பரந்தாமன், பிரேம்குமாா், விஜயன், ஜெகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் விரைந்து வந்து ஒன்றரை மணி நேரம் போராடி, கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com