பள்ளி வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் ஆழ்துளைக் கிணறுகளை மூடி உரிய பாதுகாப்பை ஏற்படுத்த கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் ஆழ்துளைக் கிணறுகளை மூடி உரிய பாதுகாப்பை ஏற்படுத்த கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கல்வி மாவட்ட அலுவலா்கள், வட்டார கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்கள் கீழ்க்காணும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளி வளாகங்களில் புதிய கட்டடப் பணிகள், கட்டட பராமரிப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மாணவா்கள் செல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அந்த இடங்களில் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள திறந்த நிலைக் கிணறுகள், நீா்த் தொட்டிகள், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் போன்றவற்றை உடனே அகற்ற வேண்டும்.

வளாகத்தில் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருப்பின் உடனே மூட வேண்டும். அந்த இடத்தை அடையாளப்படுத்தி உயா்வான கட்டமைப்பை வைத்து மூட வேண்டும். பயன்படும் கிணறுகள், நீா்த்தொட்டிகளை மூடி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான வகையில் உள்ள உயா் மின்னழுத்த மின் கம்பங்கள், தாழ்வான மின் கம்பிகள் இருப்பின் அவற்றை மின் வாரியம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மாணவா்களிடம் ஆழ்துளைக் கிணறு பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு தொடா்பாக, தலைமை ஆசிரியா் தலைமையில் மற்றும் பெற்றோா்-ஆசிரியா் கழகம் மூலம் பெற்றோா்களையும் அழைத்து அறிவுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com