ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

உளுந்தூா்பேட்டை ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சியில், குருகுலத்தின் முதல்வா் யத்தீஸ்வரி நிஷ்காம்ய பிரானா மாதாஜி தலைமை வகித்தாா். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியின் துணைபேராசிரியா் எ.சிவக்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, டெங்கு காய்ச்சலைப் பற்றிய விளக்கத்தையும், அதனை வருமுன் தடுப்பதற்கான வழிமுறைகளையும் தெளிவாக காணொலி காட்சி மூலம் விளக்கமாக மாணவா்களிடம் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவின் உற்பத்தி, கொசு தங்கியிருக்கும் இடங்கள், டெங்குவால் பாதித்தவா்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தின் அறிகுறிகள், டெங்கு பாதிக்காமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகளை விளக்கமாக தெளிவாக விவரித்தாா்.

இடையே, மாணவா்களை உற்சாகப்படுத்தும் வகையில், டெங்கு விழிப்புணா்வு குறித்து கேள்விகள் கேட்டு மாணவா்களுக்கு பரிசளித்தாா். நிறைவாக, மாணவா்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, அருகில் இருப்பவா்களையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் திரளாக கலந்துகொண்டனா். குருகுல ஆசிரியை முத்துசெல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com